×

அரசு கலைக்கல்லூரியில் மகளிர் தின விழிப்புணர்வு கூட்டம்

கொள்ளிடம், மார்ச் 18: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்துறை தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். ஆங்கில துறை பேராசிரியர் வினோத் வரவேற்றார். சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காயத்ரி கலந்து கொண்டு, சமூகத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்பேசியை பயன்படுத்தும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சைபர் கிரைம் என்றால் என்பதை நன்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார். மகளிர் தின கருத்தியலில் ரங்கோலி கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. துறை தலைவர்கள் சாந்தி, மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சவுமியா நன்றி கூறினார்.

Tags : Women's Day Awareness Meeting ,Government Art Gallery ,
× RELATED திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி...