×

கொரோனா வைரஸ் குறித்து வீண் வதந்தியை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் வாலிபர் மனு

நாகை,மார்ச்18: கொரோனா வைரஸ் குறித்து வீண்வதந்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு அளித்தார். வேதாரண்யம் அருகே துளசியாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம்ஷா. இவர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பிரவீன்பிநாயரை சந்தித்து மனு கொடுத்தார். இதில் கடந்த 8ம் தேதி சவுதிஅரேபியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கி எனது சொந்த ஊருக்கு வந்தேன். தானாக முன் வந்து நாகை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை காரணமாக பரிசோதனை செய்தேன்.

அங்கு போதிய மருத்துவர்கள் இல்லை. போதிய உபகரணங்களும் இல்லை. இதனால் என்னை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் நோய் தாக்கம் இல்லை என்று கூறிவிட்டார்கள். நானும் வீட்டிற்கு வந்து விட்டேன். இதற்கு இடையில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பதாக சமூக வலைதலங்களில் வீண் வதந்தீகளை பரப்பியுள்ளனர். இதனால் நான் மன உளைச்சல் அடைந்துள்ளேன். என் மீது வீண் வதந்தீகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது