×

அதிகாரிகள் நடவடிக்கை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்

நாகை,மார்ச்18: பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நாகையில் உள்ள சிவன் கோயில்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் குளக்கரையில் உள்ள சிம்மவாகன காலசம்ஹார பைரவர் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த சிம்ம வாகன காலசம்ஹார பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு சிறப்பு யாகம் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு மஞ்சள், திரவிய பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பைரவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

அதேபோல் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு விசேஷ பூஜைகள், ஹோமங்கள் நடந்தது. அதே போல் வேளாங்கண்ணி ரஜதகீரீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவருக்கு தேய்ப்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் சுவாமிக்கு திரவியம், இளநீர். பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Shiva ,Tebir Ashtami ,Shiva Temple ,
× RELATED ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்