×

பாஜ கண்டித்து ஆர்ப்பாட்டம் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும்

சீர்காழி, மார்ச் 18: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் ஒரு அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான விபத்துகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் மட்டுமே நிகழ்கிறது. சாலை விபத்துக்கள் அதிகரித்து கொண்டிருப்பதற்கு இது மிக முக்கிய காரணமாகும். மேலை நாடுகளில் மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டினால் கடும் தண்டனை வழங்கப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் இயக்க முடியாத அளவிற்கு புதிய தொழில் நுட்பத்தில் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மது போதையில் மோட்டார் வாகனம் ஓட்டுபவர் கொலை முயற்சி செய்தவர் ஆவார். எனவே, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் . வாகனம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதற்குரிய வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags : Baja protests ,drivers ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...