×

நகராட்சிக்கு வரி கட்டாத வணிக நிறுவனங்கள் முன் குப்பை தொட்டி வைப்பு

மயிலாடுதுறை, மார்ச் 18: மயிலாடுதுறை நகரில் நகராட்சிக்கு வரி கட்டாத நிறுவனங்கள் முன்பு நகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டிகளை வைத்து வருகின்றனர். மகாதான தெருவில் உள்ள ஜெயின் மண்டபம் முன்பும் காந்திஜி சாலையில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்கள் முன்பும் குப்பை தொட்டிகளை வைத்தனர். இதை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் மோடிக்கண்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில விவசாயிகள் அணி செயலாளர் கோவிசேதுராமன், நாஞ்சில்பாலு மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சிப்பிரமுகர்கள் தெரிவிக்கையில், கொரோனா பாதித்து வரும் இந்த நேரத்தில் குப்பை தொட்டிகளை வணிக வளாகம் முன்பு கொண்டு வந்து வைப்பது கண்டிக்கத்தக்கது.

மாற்றுவழியை தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சியின் இந்த செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு வரிவசூல் தொகை அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கட்டாத தருணத்தில் மட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மார்ச் மாதத்திற்குள் வரியை வசூல் செய்ய அரசு நிர்ப்பந்தப்படுத்துவதால் நகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது தவிர்க்க இயலவில்லை. வரிகட்டுவோரை மனசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக அல்ல என்று தெரிவித்தனர்.

Tags : businesses ,
× RELATED சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க...