×

மயிலாடுதுறையில் வீடு புகுந்து திருடிய வாலிபரை கைது

மயிலாடுதுறை, மார்ச் 18: மயிலாடுதுறை பகுதியில் வீடு புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வள்ளலார்கோயில் இரட்டைத்தெரு பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குபின் முரணான தகவலை கொடுத்துள்ளார். உடன் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் துபாஷ்அக்ரகாரத்தை சேர்ந்த சந்தோஷ்(27) என்பதும் இரட்டை தெருவில் கடந்த மாதம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளிபொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : house ,Mayiladuthurai ,
× RELATED ராமநாதபுரம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை