×

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு

திருவில்லிபுத்தூர், மார்ச் 18: திருவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்த திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா(18) என்பவரை மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியவரை திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மின்நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி...