×

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

அருப்புக்கோட்டை, மார்ச் 18: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் சாந்தி மருத்துவமனை எதிரே செயல்பட்டு வந்த கிழக்கு மின்வாரிய அலுவலகம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள நாடார்கள் திருமண மண்டப வளாக கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நாடார் திருமண மண்டப வளாக கட்டிடத்தில் இயங்கி வந்த மேற்கு மின்வாரிய அலுவலகம் விருதுநகர் ரோட்டில் உள்ள துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கும், மின்சாரம் சம்பந்தப்பட்ட தங்களது குறைகளை தெரிவிப்பதற்கும் இந்த அலுவலகத்தை பயன்படுத்துமாறு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Electricity Office ,
× RELATED சிஐஎஸ்எப்.யில் மார்ச் வரை டிரான்ஸ்பர் கிடையாது