×

ெகாரோனா விழிப்புணர்வு முகாம்

திருச்சுழி, மார்ச் 18: நரிக்குடி பஸ்நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, மல்லிகா மற்றும் நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர் ரெங்கசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் உள்பட அரசு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கிராமங்கள் தோறும் பொதுமக்கள் பொது இடங்களில் நிற்க வேண்டாமெனவும், வீட்டிற்கு செல்லும் முன்பு கை, கால், முகம் கழுவிய பின்பே செல்ல வேண்டுமெனவும், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளுக்கு முடிந்தளவிற்கு தவிர்க்குமாறு கூறினர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி செயலர்களை அழைத்து கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் அடித்து கிராமங்களில் ஒட்ட வேண்டும். முக்கிய இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டுமென அறிவுரைகள் கூறினர்.

Tags : Garona Awareness Camp ,
× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு