×

இயற்பியல் துறை தேசிய கருத்தரங்கு

அருப்புக்கோட்டை, மார்ச் 18: அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி இயற்பியல் துறை சார்பாக மேம்படுத்தப்பட்ட இயற்பியல் பொருட்களின் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சங்கரசேகரன் முன்னிலை வகித்தார். முதல்வர் முத்துசெல்வன், பொருளாளர் மதிவாணன் வாழ்த்தி பேசினர். துறைத்தலைவர் கணேசன் வரவேற்றார். கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பொன்பாண்டியன் கலந்து கொண்டு நானோ தொழில்நுட்பத்தின் அறிமுகம் என்ற தலைப்பில் பேசினார்.

மேலும் சீனாவில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொல்லக்கூடிய நவீன நானோ சில்வர் முக கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் அளவு மற்றும் அதன் பரவும் தன்மையை அறிய அதிநவீன எலக்ட்ரான் நுண்ணோக்கி பயன்படுத்தப்படுகிறது என கூறினார். கருத்தரங்கில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் தங்கத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் மீனாட்சி, நிர்மலாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Department of Physics National Seminar ,
× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு