×

ராஜபாளையம் நகராட்சி பள்ளி நூற்றாண்டு விழா

ராஜபாளையம், மார்ச் 18: ராஜபாளையம் நகர் 8வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் முருகேசன், வட்டார கல்வி அலுவலர் முருகன், ஆசிரியை லிங்கேஸ்வரி தனலட்சுமி, மேலப்பள்ளிவாசல் தலைவர் சையது இப்ராகிம், ஜமாத் தலைவர் முபாரக் அலி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், செந்தில், பள்ளி வாசல் நிர்வாகிகள் முகமது சாரீஸ், நிஜாம் பாக்குபகிர், பாபு, ஆஷிக், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இக்சாஸ் ராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rajapalayam Municipal School ,
× RELATED இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவையொட்டி இருசக்கர வாகன பேரணி