×

ராஜபாளையம் கல்லூரியில் தேசிய கலாச்சார சங்கமம்

ராஜபாளையம், மார்ச் 18: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார சங்கமம் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
கலாச்சார நிகழ்ச்சியில் ரமேஷ் குமார் வரவேற்றார். வரலாற்றுத் துறை தலைவர் வெங்கடேஸ்வரன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தலைமை உரையாற்றினார். கல்லூரி ஆட்சி மன்ற குழுச்செயலார் விஜயராகவன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் வினாடி வினா, பேச்சுப் போட்டி, ரங்கோலி, குழு நடனம், நாட்டுப்புற பாடல்கள், ஓவியப்போட்டி, நாடகம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிறைவு விழாவில் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் ஜேம்ஸ் வரவேற்றார். தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் செல்லபாண்டியன் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் கந்தசாமி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ஜெகநாத் ஜெய, லட்சுமி, சக்திவேல் மற்றும் ராம்ஜி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : National Cultural Association of Rajapalayam College ,
× RELATED பணம் திருடியவர் கைது