×

ஒரே வாரத்தில் சிவப்பு எள் கிலோ ரூ.124க்கு ஏலம்

க.பரமத்தி, மார்ச்18: கரூர் மாவட்டத்தில் கிராம புற பகுதியில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 288மூட்டைகளில் 21,411கிலோ எடைக்கு நடந்த ஏலத்தில் கருப்பு எள் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.97, அதிக விலையாக கிலோ ரூ.138க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோ ரூ.6உயர்ந்து ஏலம் போனது. இதே போல சிவப்பு எள்ளுக்காக நடந்த ஏலத்தில் சிகப்புஎள் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.102, அதிக விலையாக கிலோ ரூ.124க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.1உயர்ந்து ஏலம் போனது.

Tags : Auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்