×

தீயில் கருகி இளம் பெண் பலி

அரவக்குறிச்சி, மார்ச்18:அரவக்குறிச்சி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சி சோழ தாசன்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகள் சவுந்தர்யா (22). திருமணம் ஆகாதவர், இவர் தனது வீட்டின் அருகில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் எறும்புக்கு மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்கும் பொழுது தீ சரியாகப் பிடிக்கவில்லை என திரும்பவும் மண்ணெண்ணெய் ஊற்றும் போது ஆடையில் குபீரென தீப்பிடித்து, கால் மற்றும் உடம்பில் தீக்காயங்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா இறந்தார். அரவக்குறிச்சி போலீசர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கிராம ஊராட்சியில்நியமன பணியாளர்களில்மூன்று வருடங்களுக்கு மேல்பணியாற்றிய ஆவணம் இருந்தால் குறைந்த பட்ச மாதச்சம்பளம் அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செய்யும் பணி ஒன்றாக இருந்தும் ஒவ்வாரு பகுதியிலும் கூலி வித்தியாசமாக கொடுக்கின்றனர். கையால்கழிவுகளை அள்ளும்நிலை இன்னும் தொடர்கிறது.

Tags :
× RELATED கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு