×

பயணிகள் கோரிக்கை ஒப்பந்ததாரர் தரும் ஊதியம் வேறுபடுகிறது நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் கூலியை நிர்ணயம் வேண்டும்

கரூர் மார்ச்18: கரூர் மாவட்ட துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர்மாவட்டத்தில் கரூர், குளித்தலை, நகராட்சி, 11 பேரூராட்சிகள், பல்வறு பஞ்சாயத்து நிர்வாகங்களில் துப்புரவு பணிக்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர பகுதியை பொறுத்தளவில் கடந்த 15ஆண்டாக மிக குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த இவர்கள் தற்போது அதிக அளவில்ஒப்பந்ததார்கள் மூலமாக வேலைசெய்து வருகின்றனர் கரூர்நகராட்சியில் மட்டும் ஒப்பந்ததாரர்களின் கீழ் 500 பேர் வரை பணியாற்றுகின்றனர். நகர பகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் கூலி கொடுக்கவேண்டும் இந்தக்கூலி ஒவ்வாரு ஒப்ந்ததாரரிடம் வேறுபடுகிறது. துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சியோ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமோ கூலியை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என கோரிவருகின்றனர்.

இதுகுறித்து உள்ளாட்சி மன்றங்களில்பணிபுரியும்துப்புரவு பணியாளர்களின் பிரதிநிதிகள் கூறியது: மலக்குழியில்மனிதர்கள் இறங்கி வேலை செய்வதுதடை செய்யப்பட்டுள்ளது. அப்படிபணி செய்ய வேண்டுமானால் 15விதமான உரிமங்களை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றிருக்க வேண்டும் குறைந்தபட்ச கூலி இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. சமூகபாதுகாப்பு குறைந்தபட்ச சட்டங்களைக் கூட மாநிலஅரசு செயல்படுத்துவதில்ஆர்வம் காட்டாமல் உள்ளது. சமூகபாதுகாப்பு திட்டங்ளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. துப்புரவு பணியாளர்களின் நலவாரியம்செயல்படாமல் இருக்கிறது. அரசு துறைகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் தவிர தனியார்நிறுவனங்களிலும் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்கின்றனர். தினக்கூலி அடிப்படையில் தாம் அதிகம் பேர்பணி செய்கின்றனர். 80சதவீதத்திற்கு மேல் பெண்கள், சுயஉதவிக்குழு வழியாக பணிபுரிபவர்கள் அதிகமாக உள்ளனர்.

கிராம ஊராட்சியில்நியமன பணியாளர்களில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஆவணம் இருந்தால் குறைந்த பட்ச மாதச்சம்பளம் அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செய்யும் பணி ஒன்றாக இருந்தும் ஒவ்வாரு பகுதியிலும் கூலி வித்தியாசமாக கொடுக்கின்றனர். கையால்கழிவுகளை அள்ளும்நிலை இன்னும் தொடர்கிறது. கிராமம் பேரூராட்சி, நகராட்சியில்எவ்வித பாதுகாப்பு உபகரணங்ளும்வழங்கப்படாத நிலை உள்ளது.
தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இருந்தும் மாநில அரசு எந்த முடிவும்எடுக்கவில்லை. குடிசை மாற்று வாரியத்தில் புதிய குடியிருப்புகளை அரசு கட்டவில்லை. . பழைய குடியிருப்புகளிலேயே குடியிருந்து வருகிறோம் பசுமைவீடுகள் திட்டத்திலும் முன்னுரிமை அளிக்கவில்லை. கட்டாய இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றனர்.அதையும் செயல்படுத்தவில்லை என்றனர்.

Tags : administration ,passenger ,contractor ,
× RELATED விண்ணை தாண்டி வந்த கொரோனா விமான நிலைய நிர்வாக அலுவலகம் மூடல்