×

சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க சுங்ககேட் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை

கரூர், மார்ச். 18: சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் சுங்ககேட் பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சுங்ககேட் வழியாக செல்கின்றன. சுங்ககேட் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. கலைஞர் நகர், சுங்ககேட், தாந்தோணிகுடித்தெரு போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பல்வேறு பகுதிகளுக்கு பேரூந்தில் ஏறிச் செல்கின்றனர்.

மேலும், தாந்தோணிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளுக்கும் மாணவ, மாணவிகளும் இந்த பகுதியில் நின்று செல்கின்றனர். தற்போது ஏப்ரல் மாதம் துவங்குவதற்கு முன்னதாக கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. வெயிலில் நின்றுதான் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் பேரூந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். எனவே, இவர்களின் நலன் கருதி சுங்ககேட் பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : bus stop ,Chungkate ,
× RELATED ஞாபக மறதி குறைபாட்டால் பஸ்...