×

போடியில் தியேட்டர்கள் மூடல்

போடி, மார்ச் 18: கொரோனா தடுப்பு நடவடிக்கயாக போடியில் தியேட்டர்கள், திருமண மண்டபங்கள், கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி, தேனி மாவட்டத்தில் தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் திருமண மண்டபங்களை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்லார். இதன்படி போடியில்  13 திருமண மண்டபங்கள், 3 தியேட்டர்கள், கோயில்கள் ஆகியவை கடந்த 16ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. மேலும், போடி நகரில் போக்குவரத்தும், பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துள்ளது. பஸ்களில் செல்வதை பொதுமக்கள் குறைத்ததால், கூட்டம் இல்லாமல் செல்கின்றன. டிரைவர்கள் மாஸ்க் அணிந்தபடி பஸ்களை ஓட்டுகின்றனர்.

Tags : Closure ,Podiyil Theaters ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...