×

காவல்நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பு

வருசநாடு, மார்ச் 18: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள காவல்நிலையங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய 4 ஊர்களில் காவல்நிலையங்கள் உள்ளன. இந்த காவல்நிலையங்களுக்கு புகார் கொடுக்கவும், வழக்குகள் தொடர்பாகவும் பொதுமகக்ள் தினசரி வந்து செல்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதனடிப்படையில், கடமலைக்குண்டு உள்ளிட்ட அனைத்து காவல்நிலையங்களில் கிருமி நாசினி மருந்து மற்றும் தண்ணீர் தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், காவல்நிலையங்களுக்கு வருகிற பொதுமக்களுக்கு, கை கழுவும் முறை குறித்து விளக்கி வருகின்றனர். கடமலைக்குண்டுவில் சப்இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி, வருசநாடு சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் கொரோனா தடுப்பு பணி நடந்து வருகிறது. இதேபோல, கொரோனா தடுப்பு பணி காவல்நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : police stations ,
× RELATED பயிரை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்...