×

வறட்சி பகுதியாக அறிவிக்க கோரிக்கை

ஆண்டிபட்டி, மார்ச் 18: ஆண்டிபட்டி அருகே உள்ள கே.காமாட்சிபுரத்தில் தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். மொட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் நிஷாந்திராஜன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஆண்டிபட்டி தாலுகாவில் இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்த காரணத்தால் விவசாயம் மிகவும்  பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த பகுதியை வறட்சி பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களில் தண்ணீரை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிடில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து வர்த்தக சங்கங்கள் ஆதரவுடன் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : drought ,
× RELATED நாளை நடைபெறுகின்ற பொதுவேலை நிறுத்த...