×

ஆர்.கே.பேட்டை, மீஞ்சூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பள்ளிப்பட்டு, மார்ச் 18 : கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஒன்றிய குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலிருந்தும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சந்தியா கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் முறைகள் கட்டுப்படுத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா வரைஸ் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்திற்கு வட்டாட்சியர் சாந்தி தலைமை வகித்தார். இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா கலந்துக்கொண்டு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கோவிட் எனப்படும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி சார்பில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தலைமையில் பேருந்து நிலையம் உட்பட மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சுத்தம் சுகாதாரம், சோப்பால் கைகள் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது, காய்ச்சல், இருமல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரூராட்சி துப்புரவு பணிகளுக்கு முககவசம் வழங்கப்பட்டது.பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு தலைமையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரவி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ், கொரோனா வைரஸ் பரவும் விதம், கொரானாவால் இதுவரை எவ்வளவு பேர் எந்தெந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும், வைரஸ் பரவாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

மீஞ்சூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதா தேவி, மீஞ்சூர் வட்டார சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர்கள் நந்தியம்பாக்கம் கதிரவன், வல்லூர் ரவி வெள்ளிவாயல்சாவடி ரமேஷ், நாலூர் சகாதேவன், வாயலூர் பிரகாஷ்,. மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் நிலவழகன், நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி, கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், கடப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுரேஷ், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன், நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், வாயலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கோபி, திருவெள்ளைவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், கோளூர் ஊராட்சி மன்ற தலைவர் குமார், தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ப்ரியா ராஜேஷ் கண்ணன், அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, கல்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் பிரியங்கா துரைராஜ் உள்ளிட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கவுன்சிலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags : Coronavirus Awareness Camp ,Meenjur ,
× RELATED மீஞ்சூர், கிண்டி, தரமணியில் இருந்து...