×

காவல் உதவி மையம் திறப்பு

பொன்னேரி, மார்ச் 18:  பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் உட்பட 25க்கும் மேற்பட்ட தெருக்கள், நகர்கள் உள்ளன. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம், எஸ்.பி.சி.எல் நிறுவனம், ஜூவாரி சிமெண்ட், வடசென்னை அனல்மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம் மற்றும் அரசு தனியார் நிறுவனங்கள் கண்டெய்னர் யார்டுகள் ஆகியவை உள்ளன. இந்நிறுவனங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர்.

இங்கு நடக்கும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி சார்பில் கடந்த ஆண்டு அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே காவல் உதவி மையம்  கட்டப்பட்டது. உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு பிறகு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றவுடன் ரயில் நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் புதிய காவல் சேவை மையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று முன்தினம் அத்திப்பட்டு சடை அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன் முன்னிலை வகித்தார். அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக  எம்எல்ஏ சிறுணியம் பலராமன்,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் காவல் உதவி மையத்தை திறந்து வைத்து சிசிடிவி கேமராவை துவக்கி வைத்தனர்.   இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, உதவி ஆய்வாளர் மாரிமுத்து, அனைத்துவார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags : Opening ,Police Assistance Center ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு