×

தேர்தல் பிரிவு விளையாட்டு போட்டி

சிவகங்கை, மார்ச் 18:  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் தேர்தல் கல்வியறிவு தொடர்பான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும், வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதன் அவசியம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, சண்முகநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராமபிரதீபன், சுப்புராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் கந்தசாமி, இளையான்குடி தாசில்தார் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tournament ,Electoral Division Game ,
× RELATED கொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான...