×

நகை பட்டறையில் 15 பவுன் தங்கம் கொள்ளை

காரைக்குடி மார்ச் 18:  காரைக்குடி, மணிக்கூண்டு பின்புறம் உள்ள நகை பட்டறையில் தங்கக் கட்டிகளை விற்பனை செய்பவர் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு மாடியில் உள்ள தனது கடையை பூட்டி விட்டு நேற்று காலை திறக்க சென்றபோது கடையின் ஷட்டர் கதவுகள் உடைக்கப்பட்டு கடையில் இருந்த 15 பவுன் தங்க கட்டிகள் மற்றும் 6 கிலோ வெள்ளி கட்டிகள் திருடு போனது.

இது பற்றி காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி அருண் மற்றும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய பகுதியில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி முக்கிய பகுதியில் அனைத்து நாய் கடைகளிலும் சிசிடிவி கேமரா உள்ளபோதிலும் இந்த கொலை சம்பவம் நடைபெற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : jewelry workshop ,
× RELATED கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள...