×

கொேரானா பீதி குறைதீர் கூட்டங்கள் ரத்து


செங்கல்பட்டு, மார்ச் 18: அனைத்து கூட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி, நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு, நகராட்சி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இடையே கைகழுவுதல் உள்பட பல்வேறு நோய்த் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மற்ற  மாநிலங்களுக்கு பயணம்  செய்வதையும், பொது இடங்களில் மக்கள் கூடுவதையும்  அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், வேளாண் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் என அனைத்து கூட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Tags : Coronation panic ,meetings ,
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி