×

வாலாஜாபாத் பேரூராட்சியில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி

வாலாஜாபாத், மார்ச் 18: வாலாஜாபாத் பேரூராட்சியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினியை பேரூராட்சி ஊழியர்கள் தெளித்து வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் ஒன்றிய அலுவலகம், ரயில் நிலையம், காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், மருத்துவமனை, கருவூல அலுவலகம், வங்கிகள், பஸ் நிலையம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், தமிழக அரசு, பொதுமக்கள் கூடும் இடங்களில்   கிருமி நாசினிகள் தெளித்து சுகாதாரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி, வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் பஸ் நிறுத்தங்கள், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், ரயில் நிலையம், கோயில், மருத்துவமனை உள்பட அனைத்து பகுதிகளிலும் பேரூராட்சி ஊழியர்கள், கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதாரத்தை காக்கும் வகையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற பணிகள் கிராம பகுதிகளிலும் தொடரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : places ,Walajabad ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்