×

கொரோனா எதிரொலியால் விடுமுறை இல்லையா? குழப்பத்தில் அலுவலர்கள்

தொண்டி, மார்ச் 18: கொரோனா வைரஸ் பீதியால் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளை பள்ளிக்கு அழைக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணத்தால் தற்போது பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரையிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்பட வேண்டும் என அழைத்து வர அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சத்துணவு பணியாளர்கள், அந்த பள்ளி ஆசிரியர்களை அணுகும் போது ஏற்கனவே விடுமுறை விடப்பட்டதால் இனி குழந்தைகளை அழைக்க முடியாது என கூறிவிட்டனர். இதனால் சத்துணவு ஊழியர்கள் செய்வதறியாது உள்ளனர். கூட்டம் கூட்ட கூடாது என்பதற்காக விடுமுறை விட்ட பின்பு ஏன் மீண்டு சாப்பிட அழைக்க வேண்டும். ஒருபுறம் விடுமுறை என அறிவிப்பு, மறுபுறம் சாப்பிட அழைப்பு. அதிகாரிகள் அனைவரும் ஒன்றிைணந்து எந்த அறிவிப்பும் செய்வதில்லை என தெரிகிறது. கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தாமல் பல்வேறு காரணங்களால் விடுமறை விட்டு மேலும் பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்றடுத்தியுள்ளனர்.

Tags : Holidays ,Corona Echo ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...