×

கீழக்கரை கடற்கரை பகுதிகளில் ஆபத்தான ஜெல்லி மீன்கள் அதிகரிப்பு பொதுமக்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்

கீழக்கரை, மார்ச் 18: கீழக்கரை பகுதி கடற்கரை பகுதிகளில் பல நாட்களாக ஜெல்லி மீன்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கவனமாக செல்ல வனத்துறை அதிகாரி சிக்கந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ஜெல்லி மீன்கள் என்பது கடல் ஆமை உண்ணக் கூடிய உணவாகும். கடந்த காலங்களில் அதிக ஆமைகள் கடற்கரையில் இருந்து வந்தன. இந்த சூழலில் தற்போது மீனவர்கள் ஆமைகளை வேட்டையாடுவதும் மீன்பிடிக்க செல்லும் பொழுது வலையில் மாட்டிக்கொண்டு ஆமைகளை பக்குவமாக எடுத்து கடலுக்குள் விடாமல் மீன் வலைகளை பாதுகாக்கும் எண்ணத்தில் அதனை ‘வெட்டுவதாலும் ஆமை இனங்கள் அழிந்து வருகின்றன.


இதனால் ஜெல்லி மீன்கள் அதிகரித்து வருகின்றன. கடலுக்குள் செல்லக் கூடிய மீனவர்கள் இதன் நோக்கத்தை புரிந்துகொண்டு கடல் ஆமைகள் அதிகரிப்பதற்கு உதவ வேண்டும். கடலுக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகள் ஜெல்லி மீன்களை மற்ற மீன்களைப் போன்று விளையாடுவதற்கு உண்ணுவதற்கு பிடிக்க வேண்டாம். ஜெல்லி மீன்கள் உடம்பில் பட்டால் அலர்ஜி, தோல் நோய் உயிரிழப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் கடலுக்கு செல்ல கூடிய மீனவர்கள், ஆமைகள் வளர உதவுமாறும் ஆமைகள் மீன் வலைகளில் மாட்டிக் கொள்ளும் பொழுது அதனை மெதுவாக எடுத்து கடலில் விட வேண்டும். கடல் ஆமைகளை வேட்டையாடினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : public ,areas ,lowland ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...