×

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

சாயல்குடி, மார்ச் 18: கடலாடி, சாயல்குடி பகுதியில் மலட்டாறு உள்ளது. இங்கு நல்ல மணல் வளம் உள்ளது. இப்பகுதியில் அரசு மணல் குவாரி இல்லாததால், கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தும் மணல் கொள்ளையர்கள் இரவு,பகலாக மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். இதனையடுத்து கனிமவளத்துறை துணை தாசில்தார் வரதராஜன், கடலாடி மண்டல துணை தாசில்தார் காதர்முகைதீன் முன்னிலையில் வருவாய் துறையினர், சாயல்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலட்டாறு ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த ஒரு டிராக்டரை மடக்கினர். வண்டியிலிருந்த நான்கு பேர் தப்பித்து ஓடினர். பதிவு எண் இல்லாத டிராக்டரை பறிமுதல் செய்து, மேல்நடவடிக்கைக்கு பரமக்குடி ஆர்.டி.ஓவிற்கு பரிந்துரை செய்தனர். தப்பித்து ஓடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சாயல்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை