×

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் பீட்ருட் கிலோ ரூ.7க்கு சரிந்தது

மதுரை, மார்ச் 18: மதுரை காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பீட்ருட் விலை கிலோ ரூ.7க்கு சரிந்தது. சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து கிலோ ரூ.50க்கு விற்று வருகிறது. கொரோனா அச்சத்தில் அசைவ உணவுகள் மீதான மக்கள் ஆர்வம் குறைந்து, காய்கறிகள் விற்பனை அதிகரித்திருக்கிறது. முகூர்த்த நாட்கள் கடந்து போன நிலையிலும், காய்கறிகள் வரத்து அதிகரிப்பாலும், விற்பனையும் அதிகரித்திருப்பதாலும், விலை சாதகமான நிலையில் இருக்கிறது.

மதுரை சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் நேற்றைய விலை விபரம் வருமாறு (கிலோவிற்கு): தக்காளி ரூ.10, சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50வரை, பெரிய வெங்காகயம் ரூ.20 முதல் ரூ.30 வரை, கத்தரிக்காய் ரூ.20, முட்டைகோஸ் ரூ.9, பூசணி ரூ.10, உருளை ரூ.15 முதல் ரூ.25வரை, பாகற்காய் பெரியது ரூ.25, சிறியது ரூ.50, பீன்ஸ் ரூ.40, காரட் ரூ.30, பீட்ருட் ரூ.10, நூக்கல் ரூ.12, டர்னிப் ரூ.15, கருணை ரூ.40, சேனை ரூ.30, சேம்பு ரூ.45, கருவேப்பிலை ரூ.35, மல்லி ரூ.20, புதினா ரூ.20, முருங்கை ரூ.25. மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறும்போது, ‘‘வரத்து அதிகரிப்பினால் பீட்ருட் விலை கிலோ ரூ.7க்கு சரிந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.30வரை விற்றுவந்தது. சின்னவெங்காயம் ஒரேநிலையில் கிலோ ரூ.50க்குள் விற்று வருகிறது. முகூர்த்த நாட்கள் இல்லாதபோதும், மக்களின் காய்கறிகள் மீதான விருப்பத்தில் விற்பனை நன்றாக இருக்கிறது’’ என்றார்.

Tags : Madurai Central Market ,
× RELATED 100 சதவீத மானியத்தில் தக்காளி, பீட்ரூட் விதை