×

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்

தூத்துக்குடி, மார்ச் 18: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக  ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில்வே வாரியத் தலைவரிடம் திமுக  மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
 இதுதொடர்பாக மத்திய  ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவை நேரில் சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  பாலக்காட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும்  பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். இதே போல் மும்பையில்  இருந்து மதுரை வரை இயக்கப்படும் லோக் மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலை  தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி-சென்னை இடையே  முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில்  இருந்து சென்னைக்கு தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக கூடுதல் பயணிகள் ரயில்  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்  ஆழ்வார்திருநகரியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில்  மும்பை ரயில் ஆந்திர மாநிலத்தில் செல்லும் போது ரேணிகுண்டா ரயில்  நிலையத்தில் மட்டுமே நிற்கிறது. எனவே கூடுதலாக திருப்பதியிலும் ரயில் நிற்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகளின்  வசதிக்காக, 21 கோச் ரயில் பெட்டிகள் நிற்கும் அளவுக்கு பிளாட்பாரத்தை  விரிவு படுத்த வேண்டும்.
 இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Tuticorin ,Chennai ,
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...