×

செட்டியாபத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

உடன்குடி, மார்ச் 18: உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்தில் இளம் விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜம்புராஜ் தலைமை வகித்தார். நற்பணி மன்ற தலைவர் ராஜேஸ்வரபாண்டியன் வரவேற்றார். சுந்தரபாண்டி, ராஜ், கார்த்திகேயன், சிவக்குமார், பெரியசாமி, ஜெயனேந்திரபிரகாஷ், பாலகிருஷ்ணன், தனசேகர், சிவமுருகன், ஆனந்தன், மாணிக்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரகுலேஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதில் திருச்செந்தூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முருகன், குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோர் சட்டம் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி பேசினர். செட்டியாபத்து பஞ். தலைவர் பாலமுருகன், துணை தலைவர் செல்வகுமார், சட்ட ஆலோசகர் அருணாசல ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவநாதன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை இளம் விவேகானந்தர் நற்பணி மன்ற துணை தலைவர் முகேஷ், நிர்வாக குழு தலைவர் சிவபாலன், மன்ற நிர்வாக குழு செயலாளர் முகேஷ் பார்த்திபன் மற்றும் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Tags : Legal Awareness Camp ,Chettyapam ,
× RELATED சட்ட விழிப்புணர்வு முகாம்