×

விக்கிரமங்கலம் அருகே டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

சோழவந்தான், மார்ச் 18: டூவீலரில் சென்ற இருவர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த மேலப்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை(67). கூலி தொழிலாளியான இவரும், நல்லதம்பி என்பவரும் டூவீலரில் நேற்று மதியம் அணைப்பட்டி சென்றுள்ளனர்.

கவுல்பட்டி அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மச்சக்காளை மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த நல்லதம்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,Wickremangalam ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...