×

வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

மதுரை, மார்ச் 18: மதுரையில் திமுக முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி வீட்டின் மீது வெடிகுண்டு வீசி விட்டு, டூவீலரில் தப்பிய 2 பேரை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்ட திமுக முன்னாள் செயலாளராகவும், தற்போது மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராகவும் இருப்பவர் வேலுசாமி(71). இவர் முன்னாள் எம்எல்ஏ. மதுரை அண்ணாநகரிலுள்ள இவரது வீடு மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், 2 பேர் டூவீலரில் வந்து வீட்டுக்குள் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. அவர்கள் யார்? ஏன் வீசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர். இந்த குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உதவி போலீஸ் கமிஷனர் லில்லி கிரேஸி தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : bomb blast ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு...