×

டெம்போ வேன் மோதி தொழிலாளி படுகாயம்

குளத்தூர், மார்ச் 18: குளத்தூர் அருகே உள்ள கல்லூரணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முத்துகிருஷ்ணன் (40). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதியம் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(41) என்பவர் ஓட்டி வந்த டெம்போ வேன் எதிர்பாராதவிதமாக முத்துகிருஷ்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து குளத்தூர் எஸ்ஐ செல்லத்துரை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Tempo ,van collision worker ,
× RELATED புனே அருகே ஓடும் டெம்போவில் இரவு...