×

தென்காசி மாவட்டத்தில் வெளி நாட்டிலிருந்து திரும்பிய 19 பேர் தொடர் கண்காணிப்பு

தென்காசி, மார்ச் 18: தென்காசி மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 19 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கூறினார். தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண்சுந்தர்தயாளன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவருமில்லை. மாவட்ட பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில்இருந்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 36 வெளிநாட்டு பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளனர். இதில் 17 நபர்கள் 28 நாட்கள் கண்காணிப்பு முழுவதுமாக முடிந்து நோய் அறிகுறி இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 நபர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கேரள, தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடியில் சுகாதார ஆய்வாளர்கள் பிரத்தியேக மருத்துவர்கள் கொண்டு தொடர் கண்காணிப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், கோட்டாட்சியர் பழனிக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மரகநாதன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் (பொறுப்பு) வரதராஜன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : persons ,district ,Tenkasi ,country ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...