×

30 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம், மார்ச் 18: கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், மாணவிகளுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்கி தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கடந்த 1991ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 3 முதல் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500, 6ம் வகுப்பிற்கு ரூ.1,000, 7, 8ம் வகுப்பிற்கு ரூ.1,500 கல்வி ஊக்கத்தொகையாக ஆதிதிராவிட மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு 3 முதல் 5ம் வகுப்பு வரை ரூ.500, 6ம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உயர்த்தப்படாமல் அப்படியே உள்ளது. தற்போதுள்ள கல்வி செலவிற்கேற்ப இத்தொகையை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும். 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் கல்வித்தொகை வழங்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்