×

பள்ளியில் உணவுத்திருவிழா

ஒட்டன்சத்திரம், மார்ச் 18: ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. பாரம்பரிய உணவுகளான கம்மங்கூழ், சோளக்கூழ், தினைக்கூழ், ராகிக்கூழ், கோதுமை கூழ், தோசை வகைகளில் கோதுமை, ராகி, கேழ்வரகு மற்றும் கொத்தவரை, மிளகாய், மாங்காய், சுண்ைடக்காய், கோவக்காய், இனிப்பு வகைகளில் ரவா பாயாசம், ரவா கேசரி, கோதுமை கேசரி, பாயாசம் மற்றும் உணவு வகைகளில் குதிரைவாலி, வரகினால் செய்யப்பட்ட துவையல், பிரண்டை, எள், ஆகியவற்றிலும், முளை கட்டிய பயிர் வகைகள், பாண வகைகள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை காட்சிப்படுத்தி, பாரம்பரிய உணவுமுறையின் முக்கியத்துவத்தை அறியும் வண்ணம் விளக்கமளித்தனர். மாணவ, மாணவிகள் ஒவ்வொரு தானிய வகை உணவுகளிலும் உள்ள நோய் எதிர்ப்பு, அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கிக்கூறினர்.

Tags : food festival ,school ,
× RELATED அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர...