×

பாளையில் துணிகரம் இளம்பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

நெல்லை, மார்ச் 18:  பாளையில் பைக்கில் வந்த மர்ம வாலிபர்கள் இளம்பெண்ணிடம் ஐந்துரை பவுன் நகையை பறித்து சென்றனர். பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல்ராஜன் (28). இவர் பாளையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெபா (24). இவர் நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு தனது சகோதரர் தாமோதரனுடன் பைக்கில் கிருஷ்ணாபுரத்திலிருந்து பாளை பெருமாள்புரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
பெருமாள்புரம் பாரதி நகர் 9வது தெருவில் திரும்புவதற்காக தாமோதரன் பைக்கை மெதுவாக ஓட்டியுள்ளார்.

அப்போது அவரது பைக்பை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இரு மர்ம வாலிபர்கள் திடீரென ஜெபாவின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்றனர். இதனையடுத்து தாமோதரன், மர்ம வாலிபர்களை பைக்கில் சிறிது தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். பறித்து சென்ற நகையின் மதிப்பு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் ஜெபா புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : bar ,
× RELATED 10 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட நகையை கண்டு பிடித்த 6 வயது சிறுவன்...