×

திருபுவனை அருகே குடிபோதையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

திருபுவனை, மார்ச் 18: திருபுவனை அடுத்த சன்னியாசிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகன் மகன் சக்திவேல்(20), தனியார் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர். இவர், அப்பகுதியில் உள்ள புளியமரம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த பரசுராம் மகன் சசிகுமார் என்பவர் குடிபோதையில் அருகில் கிடந்த கல்லை எடுத்து சக்திவேல் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சக்திவேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருபுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து சக்திவேல், திருபுவனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிந்து சசிகுமாரை தேடி வருகிறார்.

Tags : Volleyball attack ,Thirubuvan ,
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி