×

வில்லியனூர் அருகே காங்கிரஸ்- பாஜகவினர் மோதல்

வில்லியனூர், மார்ச் 18: வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் சில நாட்களுக்கு முன் பாஜக சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், அதன் மீது போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதனை பாஜகவினர் பார்த்துவிட்டு அந்த போஸ்டரை கிழித்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவத்தன்று காலை, பாஜக பிரமுகர்கள் மைக்கேல், சக்திவேல் ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஷ், அரவிந்தன், மணிகண்டன் மற்றும் சிலர் வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இதில் மைக்கேல் படுகாயம் அடைந்தார்.  இது குறித்து அவர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ராஜேஷ், அரவிந்தன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இதேபோல் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் மைக்கேல், சக்திவேல் ஆகியோர் மீது வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

Tags : Congress ,clash ,BJP ,Villianur ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...