×

மொபட் மீது கார் மோதி பெண் பலி

உளுந்தூர்பேட்டை,  மார்ச் 18: கடலூர் மாவட்டம் முத்தனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (67). இவரும் இதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பவானி (45) என்பவரும்  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் உள்ள பால் கம்பெனிக்கு  வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து ஒரு மொபட்டில் வெள்ளையூரில் இருந்து  உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

குறுக்கு ரோட்டில் வந்தபோது அந்த  வழியாக வந்த கார் மோதியதில் பைக்கில்  இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பவானி சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். மொபட்டை ஓட்டி  வந்த அன்பழகன் மற்றும் வெள்ளையூர்  கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (47 )ஆகிய இருவரும் படுகாயமடைந்து  உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை  அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர்  எழிலரசி சப்இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : car crashes ,
× RELATED பெண்ணிடம் வழிப்பறி