×

கொரோனா பாதிப்பு எதிரொலி தாராபுரம் மாரியம்மன் கோயில் விழா ஒத்திவைப்பு

தாராபுரம். மார்ச் 18: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியால் தாராபுரம் மாரியம்மன் கோயில் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா மற்றும் கட்டளை தாரர் நிகழ்ச்சிகள் 30 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு விழா நேற்று துவங்கி வரும் 1ம் தேதி வரையும் அதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு கட்டளைதாரர்கள் நிகழ்ச்சிகளும் என 30 நாட்களுக்கு கோவில் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவின்படி இக்கோயில் ஆண்டு விழா காலவரையின்றி மறுதேதி குறிப்பிடும் வரை ஒத்திவைக்கப்படுவதாக கோயில் நிர்வாகிகள் அறிவித்தனர். கோயில் விழா ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் வருகை இன்றி கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags : Tarapuram Mariamman Temple ,
× RELATED வேளாண் சட்டங்களின் பாதிப்புகளைப்...