×

கொரோனா எதிரொலி வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்

திருப்பூர், மார்ச் 18: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் திருப்பூரில், வரும் 21ம் தேதி நடைபெறவிருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 11ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
 இது குறித்து மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கை: திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற இருந்தது. ஆனால், கொரானா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டு வரும் ஏப்ரல் 11ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 8 மணிமுதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

Tags : Corona ,employment camp date change ,
× RELATED கொரோனாவும் கடந்து போகும்!