×

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆலோசனை கூட்டம்

திருப்பூர், மார்ச் 18:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம், ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. பிளஸ்-2 தேர்வு, 24ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு 26ம் தேதியும் முடிவடைய உள்ளன. அடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 349 பள்ளிகளிலும் படிக்கும், 30 ஆயிரத்து, 602 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 856 பேரும் தேர்வெழுத உள்ளனர். மொத்தம், 89 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகள், காப்பியடித்தல், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க, கலெக்டர் மற்றும் கல்வி அலுவலர்கள் தலைமையில், 196 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்களாக ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி பேசுகையில், ‘பிளஸ் 1 தேர்வு முடிந்ததும் அடுத்த நாளே பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குவதால், தேர்வறைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும், புகார் மற்றும் ஆலோசனை பெட்டி வைக்கப்படும். கேள்வித்தாள்களை மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் வழித்தட அலுவலர்கள் பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Class General Examination Advisory Meeting ,
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...