×

பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்க கோரிக்கை

திருப்பூர், மார்ச் 18: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் கிருமி நாசினிகளை தெளிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி கன்ஸ்யூமர் கேர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தி கன்ஸ்யூமர்ஸ் கேர் சங்கம் சார்பில் உலக நுகர்வோர் தினவிழா கன்ஸ்யூமர்ஸ் கேர் சங்க செயற்குழு கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி கன்ஸ்யூமர்ஸ் கேர் சங்க தலைவர் காதர் பாட்ஷா தலைமை வகித்தார். இதில் திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன்  நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: உலக அளவில் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ்களின் தாக்கம் பேருந்துகளுக்குள்ளும் பரவ வாய்ப்பு இருப்பதால் பயணிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளின் உள்பகுதியில் பவர்ஸ்பிரே கொண்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இதேபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், பயணிகள் நிழற்குடைகள், ஓட்டல்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளை தெளிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க பொது செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சென்னியப்பன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் தனம்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் கவிதா நன்றி கூறினார்.

Tags : places ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...