×

ரூ.4.58 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

அவிநாசி,மார்ச் 18: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு வாரம் தோறும் விவசாயிகள் கொண்டு வரும் தென்னை மற்றும் பனங்கருப்பட்டிகள் ஏலத்தில் விற்கப்படும். நேற்று நடந்த ஏலத்துக்கு, 2 ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டியும், ஆயிரம் கிலோ பனங்கருப்பட்டியும் வந்திருந்தன. தென்னங்கருப்பட்டி  கிலோவுக்கு ரூ. 146 வீதம்,  ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்துக்கு ஏலம் போனது. பனங்கருப்பட்டி  கிலோ ஒன்றுக்கு ரூ. 165.30 வீதம்,  ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 300க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. இத்தகவலை கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : Blackberry ,
× RELATED கருப்பையைக் காக்கும் கருப்பட்டி!