×

மகுடஞ்சாவடியில் உள்ளாட்சி வார்டு

உறுப்பினர்களுக்கு பயிற்சிஇளம்பிள்ளை, மார்ச் 18: மகுடஞ்சாவடி, வீரபாண்டி, இடைப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி உள்ளிட்ட ஒன்றிய பகுதியில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான அறிமுக பயிற்சி, கூடலூர் மற்றும் கன்னந்தேரி கிராம சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் பயிற்றுனர்கள் முபாரக், சுமதி, சாகுல்ஹாமீன், ராஜாமணி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி நிறைவு விழா நேற்று முன்தினம்
நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள், பயிற்சி கையேடுகள், பேக், எழுது பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி பிடிஓக்கள் வெங்கடேசன், செல்வராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Makutanjavadi ,
× RELATED மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை