×

மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து விதமான பார்களையும் மூட உத்தரவு

சேலம், மார்ச் 18:கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் உள்ளிட்ட  அனைத்து விதமான பார்களையும் மூட வேண்டும் என கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி வரை, மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபான பார்கள், எம்எல் 2, எப்எல் 3, எப்எல் 3ஏ, எப்எல் 3ஏஏ, எப்எல் 10 உரிமம் பெற்ற மதுபான பார்கள், விளையாட்டு அரங்குகள், கிளப்புகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கூறிய அனைத்து பார்கள் மற்றும் விடுதிகள், கட்டாயம் மூடப்பட்டு இருக்க வேண்டும். உத்தரவை மீறி, பார்கள் திறந்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என எச்சரித்துள்ளார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மாநகர் மற்றும் மாவட்டம் என மொத்தம் 213 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 80க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மாக்குடன் இணைந்த பார்கள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து பார்களையும் மூட மாவட்ட மேலாளர் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் நேற்று அனைத்து பார்களும் மூடப்பட்டன.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...