×

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொற்று நோய் தடுப்பு மாநில ஆலோசகர் ஆய்வு

கூடலூர், மார்ச் 19: கூடலூர் பந்தலூரை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள 8 சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்லைகள் வழியாக கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு லைசால் தெளிக்கும் பணிகளும், வாகனங்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய இன்பராரெட் தர்மா மீட்டர் மூலம் சோதனைகளும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கைகளை சுத்தமாக கழுவுவது குறித்து விளக்கங்களும் சுகாதார துறையினரால் அளிக்கப்பட்டு வருகின்றது.

இதேபோல் கேரளாவில் பறவை காய்ச்சல் மற்றும் குரங்கு காய்ச்சல் பரவல்  காரணமாக கால்நடைத்துறை துறையினரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எல்லைப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர். கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினரின் பணிகளை தொற்றுநோய் தடுப்பு மாநில ஆலோசகர் டாக்டர் துரைராஜ் நேற்று ஆய்வு செய்தார். நாடுகாணி சோதனைச் சாவடியில் இப்பணிகளை ஆய்வு செய்த பின் ஊட்டிக்கு திரும்பிச் சென்றார்.  வட்டார  மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் ஜெபதீஸ் புரூஸ், சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம், மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் யோகராஜ், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : State Coroner ,
× RELATED பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு...