×

நீலகிரியில் கால்நடைகளுக்கான மொபைல் ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கம்ஊட்டி, மார்ச் 18: நீலகிரி மாவட்டத்தில் 29 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 7 கிளை நிலையங்கள் மூலம் கால்நடை பராமரிப்புத்துறையினரால் கால்நடைகளுக்கான சிகிச்சை மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடை மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தியும், விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு கால்நடை நலன் பாதுகாக்கப்படுகிறது. மேலும், அவசர காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் மெடிக்கல் மொபைல் ஆம்புலென்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திற்கான கால்நடை மெடிக்கல் மொபைல் ஆம்புலன்ஸ் வாகனத்தின் சேவையை நீலகிரி மாவட்ட கலெக்டர் துவக்கி ைவத்து பேசுகையில், ‘‘இத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் ஏதேனும் நோய் வாய்ப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இயலாதபட்சத்தில் இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் இலவச அழைப்பு எண்ணான 1962 எண்ணை அழைத்துக் கொள்ளலாம்.

தொலைபேசி மூலம் அழைத்தால், கால்நடை வளர்ப்போரின் இல்லங்களுக்கே நேரடியாக வந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கவும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மேல் சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளுக்கு கூடலூர், குன்னூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் நடடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் அனைவரும் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நீலவண்ணன், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநர் வேடியப்பன், மருத்துவர் சுகுமாரன், கால்நடை உதவி மருத்துவர்கள் ராஜமுரளி, பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Launch ,Nilgiris ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நாளை முதல் பணிகளை தொடங்க முடிவு